தாமரைக்குளம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தாமரைக்குளம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
தாமரைக்குளம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர், ஜன.10- அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் ஊராட்சியில் உள்ள ராணி மங்கம்மாள் மண்டபத்தில் சமத்துவ பொங்கல் விழா ர் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஜெயலலிதா வு பேரவை மாவட்ட இணை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அரசு தலைமை கொறடாவும், - அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி துரைராஜ் வரவேற்புரை யாற்றினார். 5-ம் வகுப்பு மாணவி ரூபா ராணி மங்கம்மாள் வேடம் அணிந்து அவர் செய்தநல்லாட்சியை பற்றி பேசினார். இதையடுத்து, பொதுமக்கள் சர்க்கரை, வெண் பொங்கல் வைத்து குளவையிட்டு வழிபட்டனர். விழாவில் ஆரம்ப சுகாதார நிலையடாக்டர் சரண்யா, அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை செந்தமிழ் செல்வி மற்றும் தாமரைக்குளம் ஊராட்சியில் உள்ள மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக் கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story