திருப்பத்தூரில் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் பேருந்து படிகட்டில் பயணம்

திருப்பத்தூரில் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் பேருந்து படிகட்டில் பயணம்
X
திருப்பத்தூரில் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் பேருந்து படிகட்டில் பயணம்
திருப்பத்தூர் மாவட்டம் அரசு பேருந்தில் இரும்பு ராடு உடைந்து சாலையில் உரசிக்கொண்டு சென்ற நிலையிலும் உயிரைப் பணயம் வைத்து பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு சாலையில் கால்களை உரசியவாறு செல்லும் பள்ளி மாணவர்கள்! நடத்துனர் உள்ளே செல்ல அறிவுரை வழங்கியும் கண்டுகொள்ளாத மாணவர்கள்* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வெங்களாபுரம், மாடப்பள்ளி, குருசிலாப்பட்டு, பெருமாபட்டு, வரை அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. இந்த நிலையில் மாலை நேரத்தில் அந்த பேருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் பயணிக்கும் போது மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி உயிரை பணயம் வைத்து கால்களை கீழே தொங்கவிட்டும் பயணித்தனர். அது மட்டுமல்லாமல் அந்தப் பேருந்தில் இரும்பு ராடு ஒன்று உடைந்து சாலையில் ஆபத்தான முறையில் உரசி கொண்டே சென்றது. அதனை அறிந்த அரசு பேருந்து நடத்துனர் பேருந்து நிறுத்தி பள்ளி மாணவர்களை உள்ளே செல்லுங்கள் எனவும் அறிவுரை வழங்கினார் இருந்தபோதிலும் அதனை கேட்காத மாணவர்கள் திரும்பவும் படிக்கட்டில் தொங்கியபடியே சென்றனர். இதனால் எந்த நேரத்திலும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இதில் கவனம் செலுத்தி காலை மற்றும் மாலை நேரத்தில் அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது…
Next Story