அனுமதியின்றி குடிநீர் எடுக்கப்பட்ட இடம்

X
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி கீழ்வேளூர் - கோகூர் சாலையில், குருவிப்பாடி கிராமத்தில், ஒரு இடத்தில் உரிய அனுமதியின்றி குடிநீர் எடுப்பதாக கீழ்வேளூர் தாசில்தாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில், தாசில்தார் கவிதாஸ், வருவாய் ஆய்வாளர் அகிலா, கிராம நிர்வாக அலுவலர் ரவிந்திரபாண்டியன் ஆகியோர் விரைந்து சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில், அந்த இடத்தில் அனுமதியின்றி லாரி மூலம் குடிநீர் எடுப்பது தெரியவந்தது. அதன் பேரில், குடிநீர் எடுக்கப்பட்ட இடத்தின் பிரதான கேட், தாசில்தார் முன்னிலையில், பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
Next Story

