குழந்தை இல்லாத விரக்தி: கணவன் மனைவி தற்கொலை

பழைய காட்பாடியில் கணவன் மனைவி குழந்தை இல்லாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வேலூர் காட்பாடி அடுத்த பழைய காட்பாடி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (52). இவரது மனைவி ராஜம்மாள் (45). இருவரும் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் திருமணம் ஆகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத விரத்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல உறங்கச் சென்றவர்கள் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உறவினர்கள் உடனடியாக காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story