ரயில்வே கோட்ட பென்ஷனர்கள் கூட்டம்

ரயில்வே கோட்ட பென்ஷனர்கள் கூட்டம்
கூட்டம்
சின்னசேலம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட பென்ஷ னர்கள் சங்க கூட்டம் மற் றும் 47வது ஆண்டு விழா நடந்தது. சேலம் கோட்ட மாவட்ட பென்ஷனர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கவேல், செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். செயலாளர் மனோகரன் வரவேற்றார்.சேலம் கோட்ட ஆடிட்டர் ஆறுமுக வடிவேல், சின்னசேலம் இந்தியன் வங்கி மேலாளர் ரித்தீஸ் சந்திரா, விழுப்புரம் மருத்துவ கல்லுாரி முன்னாள் கண்காணிப்பாளர் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் இச்சங்கத்தை அகில இந்திய அளவிலான மற்ற சங்கத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.
Next Story