கணவன், மகன் மாயம்: மனைவி போலீசில் புகார்
Kallakurichi King 24x7 |10 Jan 2025 6:32 AM GMT
புகார்
வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூரை சேர்ந்தவர் சின்னவாண்டு மகன் சக்திவேல்,41; இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் பகண்டைகூட்ரோட்டில் வாடகை வீட்டில் வசிக்கிறார். கடந்த 5ம் தேதி தந்தை சக்திவேல் மற்றும் மகன் ஜெயகிருஷ்ணா,8; ஆகிய இருவரும் ஆதார் கார்டு புதுப்பிப்பதற்காக வாணாபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால், அவரது குடும்பத்தினர் அச்சமடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன கணவன் சக்திவேல், மகன் ஜெயகிருஷ்ணாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி அனு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன தந்தை, மகனை தேடி வருகின்றனர்.
Next Story