கசிநாயக்கன்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
Tirupathur King 24x7 |10 Jan 2025 6:40 AM GMT
கசிநாயக்கன்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பொதுமக்கள் சாமி தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்கவாசல் திறப்பு திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகசினாயக்கன் பட்டி பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது இந்த கோயிலில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் வழிப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியான இன்று விடியற் காலை மேல தாலங்களுடன் இன்னிசை, வேதமந்திரங்கள் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழங்க கோஷங்கள் எழுப்பினர் பின்னர்மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபார்தனை மந்தரங்கம் முழங்க திரளான பக்தர்கள் எம்பெருமானை மனதார வழிப்பட்டு சென்றனர் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story