பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்-2024-2025-ன் கீழ் ரூ.19.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் தூர்வாரும் பணிகளையும், சிந்தல்பாடி ஊராட்சி சி.பள்ளிப்பட்டியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்-2024-25 -ன் கீழ் ரூ.102.90 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்துதல் பணிகளையும். சிந்தல்பாடி ஊராட்சி சி.பள்ளிப்பட்டி துவக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்- 2024-2025-ன் கீழ் ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும், தாதனூர் ஊராட்சி ஒபிளிநாயக்கனஅள்ளி கிராமத்தில் PM-JANMAN திட்டத்தின் கீழ் ரூ.152.01 இலட்சம் மதிப்பீட்டில் 30 வீடுகள் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.இந்த ஆய்வின்போது. கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன். உதவி பொறியாளர்கள் பழனியம்மாள்,சாந்தி,சவுண்தீபன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story