முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு

முருகர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
வழிபாடு
திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் மார்கழி கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருக்கோவிலுார் , மருத்துவமனை ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், நடந்தது.மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பரனுார் அம்பலவாணன் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story