காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும்

காற்றின் தரத்தை பாதுகாக்க வேண்டும்
வேண்டும்
போகிப்பண்டிகைக்கு பொதுமக்கள் பழைய பொருட்கள் எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் -என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : நம் முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை தீயிட்டு எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தி உள்ளார்,
Next Story