தந்தை பெரியார் பற்றி அவதூறு சீமானை கைது செய்ய

தந்தை பெரியார் பற்றி அவதூறு சீமானை கைது செய்ய
வலியுறுத்தி தி.க. மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
நாகை மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் ரா.ராமலிங்கம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா ஆகியோர், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனிடம் நேற்று முன்தினம் கொடுத்துள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது கடந்த ஜனவரி 8-ம் தேதி வடலூரில் செய்தியாளர் சந்திப்பில், தந்தை பெரியாரை பற்றி அவதூறாகவும், உண்மைக்கு புறம்பான செய்தியை கூறி, சமூகத்தில் வன்முறையும், பதட்டமான சூழ்நிலையும், உருவாக்குவதற்கு நயவஞ்சர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு, சுயமாக வாந்தி எடுத்து வன்மத்தை கக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story