மேலூரில் திருமாவளவன் ஆர்ப்பாட்டம்.

மதுரை மேலூரில் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரிட்டாபட்டி, புலிப்பட்டி, அ.வல்லாளப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கப்பாதை திட்டத்தை கைவிடவேண்டும், வேதாந்தா குழுமம் இந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை திரும்ப பெற வேண்டும், முல்லைப் பெரியாறு பாசன விவசாய நிலங்களை பாதுகாத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.10) மதியம் ஆர்ப்பாட்டம் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story