ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
பரமக்குடியில் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் முன்னிட்டு கல்லூரி மாணவிகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மிக சிறப்பாக கொண்டாடினர்
ராமநாதபுரம் பரமக்குடியில் தனியார் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் முன்னிட்டு கல்லூரி மாணவிகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மிக சிறப்பாக கொண்டாடினர். ஜனவரி 15 ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் பாரம்பரியமிக்க கும்மி நடனமிட்டு சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர். பெண்கள் செட் சேலை மற்றும் ஆண்கள் வேஷ்டி சட்டை அணிந்து, விறகு அடுப்பில் புது பானையில் மஞ்சள் கொத்துக்கள் கட்டி, பனங்கிழங்கு, கரும்புகள் வைத்து பொங்கல் பொங்கி வரும் போது குலவையிட்டு, உற்சாகத்துடன் பொங்கல் வைத்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் மாணவ - மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்று கூடி கும்மி நடனம் ஆடி பாடி, குழு போட்டோக்கள், செல்பிக்கள் எடுத்து கொண்டாடினர். கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தனர். மேலும் தென்னங்கீற்றால் செய்யப்பட்ட குடிசைகள் அமைக்கப்பட்டு பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தனர், தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சினிமா பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் சமத்துவ பொங்கல் விழாவை மிக சிறப்பாக கொண்டாடினர்.
Next Story