வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
Nagapattinam King 24x7 |10 Jan 2025 9:52 AM GMT
சமத்துவ பொங்கல் விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். பொங்கல் விழாவிற்காக, மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடைகளான பட்டு உடுத்தி விழாவில் கலந்து கொண்டனர். விழாவில், சிறுமிகள் புத்தாடை அணிந்து பாடல் பாடியும், பல்வேறு வகையான பாடல்களுக்கு நடனம் ஆடினர். பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
Next Story