அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
அடுத்தடுத்து இரு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
மதுரவாயல் காா்த்திகேயன் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜீவ், அப்பகுதியிலுள்ள சன்னதி தெருவில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை வழக்கம்போல அவா் கடையை திறக்கச் சென்றாா். அப்போது கடையின் பூட்டை உடைத்து, பணப்பெட்டியில் இருந்த ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதேபோல ராஜீவ் கடையின் அருகே உள்ள மளிகைக் கடையிலும் பூட்டை உடைத்து ரூ. 14 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story