செந்துறை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Ariyalur King 24x7 |10 Jan 2025 10:29 AM GMT
செந்துறை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி விசாரித்துள்ளனர்.
அரியலூர், ஜன.10- அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வீராக்கான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வலம்புரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை கிராம மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் ஏற்கனவே பலமுறை உண்டியல் திருட்டு நடந்துள்ளது. இதையடுத்து, கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த கேமராக்கள் கடந்த சில நாட்களாக வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் புதன் அன்று இரவு கோவிலின் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து கோவில் பூசாரி பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story