டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகளை தடுக்க கணினி மையம் .அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு.
Karur King 24x7 |10 Jan 2025 11:34 AM GMT
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகளை தடுக்க கணினி மையம் .அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகளை தடுக்க கணினி மையம் .அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு. டாஸ்மாக் நிறுவனம் 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்கிறது. 11 நிறுவனங்களிடம் இருந்து மதுவும்,7- நிறுவனங்களிடம் பீர் வகைகளும் கொள்முதல் செய்கிறது. ஆலைகளில் இருந்து மதுபான வகைகள் டாஸ்மாக் கிடங்குக்கு லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து மதுக்கடைகளுக்கு அனுப்பப்படுகிறது கடைகளில் மதுவகை இருப்பு, தேவைப்படும் மதுவகை உள்ளிட்ட விவரங்களை மேற்பார்வையாளர்கள் மேலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப மது வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் குறிப்பிட்ட நிறுவனங்களில் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்து வருகிறது. இவற்றை தடுக்க கிடங்குகளில் இருந்து மது பிரியர்களுக்கு விற்பது வரை கணினி மயமாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தற்போது கரூர், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு உள்ளிட்ட 12 மாவட்ட மதுக்கடைகளில் கணினிமய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடையில் மது விற்பனை விவரங்களை கணினியில் அதிகாரிகள் எங்கிருந்தபடியும் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story