பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.*

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், காந்திநகர், மாருதி நகர், மீனாட்சிபுரம், மில் கிருஷ்ணாபுரம், முத்துமாரி நகர், பி டி ஆர் நகர், வ உ சி நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 22 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் திட்டமிட்ட வளர்ச்சி அடிப்படை வசதிகள் உயர் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார மருத்துவ வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் என கூறி சமுசிகாபுரம் ஊராட்சியை ராஜபாளையம் நகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பட்சத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், குப்பை சேகரிப்பதற்கான சேவை உள்ளிட்ட வரிகள் பல மடங்கு உயர்த்தப்படும். மேலும் 100 நாள் வேலைத்திட்டமும் நிறுத்தப்படும். இதனால் அன்றாடம் கூலி வேலை செய்து வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சிபிஐ சிபிஎம் அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தில் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. போராட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பு கடிததம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்டது.
Next Story