விபத்தில் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர் உயிரிழப்பு
Nagercoil King 24x7 |10 Jan 2025 12:02 PM GMT
தக்கலை
குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (35). சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர். நேற்று மாலை திக்கணங்கோடு பகுதியில் உள்ள அய்யா வைகுண்டர் கோயிலில் நடந்த விழாவில் சவுண்ட் சர்வீஸ் முடித்துவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது தக்கலை அருகே கொல்லாயி என்ற இடத்தில் செல்லும்போது பெண் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனால் பெண் மீது மோதாமல் இருக்க சுனில் ராஜ் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுனில் ராஜு இன்று 11-ம் தேதி அதிகா காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி என்பவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story