ஆவடி காவல் ஆணையரகத்தில் சீமான் மீது புகார்
Tiruvallur King 24x7 |10 Jan 2025 12:09 PM GMT
பெரியாரை பற்றி பொய்யான தகவல்களையும் ஆதாரமற்ற அவதூறு செய்திகளை கூறி சமூக அமைதியை கெடுக்கும் சீமான் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் ஆவடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் புகார்
பெரியாரை பற்றி பொய்யான தகவல்களையும் ஆதாரமற்ற அவதூறு செய்திகளை கூறி சமூக அமைதியை கெடுக்கும் சீமான் என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழர் விடுதலைக் கழகம் சார்பில் ஆவடியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் புகார் 95 வயது வரை இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், மனித சமத்துவத்திற்காகவும் போராடிய தந்தை பெரியார் அவர்களை மிகவும் இழிவாகவும், அவர் வாழ்வில் எந்த நிலையில் சொல்லாத உனக்கு காம இச்சை அதிகமானால் உன் தாயிடமோ, உன் அக்காள் தங்கையிடமோ கூட தீர்த்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாகவும் சமூக நீதிக்கும் பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சமூக நீதிக்கு பெரியார் எதிரானவர் என்றும் கூறியிருப்பது முழுமையான பொய்யாகும். அவருடைய அத்தனை பேச்சுகளும் கடிதங்களும் கருத்துக்களும் அச்சடிக்கப்பட்டு பதிவாக புத்தங்களாக வெளிவந்துள்ளது. இது போன்ற தகவல் எதிலும் இல்லை மேலும் 1951 ஜூன் 18-நாள் அரசமைப்பு சட்டபிரிவு15-ல் திருத்தம் கொண்டு வந்து வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட முக்கிய காரணம் தமிழ்நாட்டின் தந்தை பெரியார் என்பதற்க்கு இந்தி நாடாளுமன்ற பதிவுகள் உள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும். இது எப்படி இருக்க பொய்யான தகவல்களை கூறி அமைதியாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டின் தமிழ் மக்களிடையே பிரிவுகள் ஏற்படுத்துகின்ற வகையிலும் செய்ல்பட்டு வருகின்ற திரு. சீமான் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சமுக அமைதியை நிலை நாட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதன் வழியாக நாங்கள் பெரிதும் நேசிக்கின்ற தந்தை பெரியார் அவர்களை பற்றி அவர் பேசிய பேச்சால் எங்களுடைய மனது பெருமளவில் காயப்பட்டு உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுத்து சமூக அமைதிக்கு உதவுமாறு அவர் அளித்த புகார் என்று தெரிவித்துள்ளார்.
Next Story