பெண் மீது சூடான எண்ணெயை ஊற்றி கொலை செய்த

பெண் மீது சூடான எண்ணெயை ஊற்றி கொலை செய்த
ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பு
நாகை கோட்டைவாசல்படி நடராஜர் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேசன் (36). இவரது மனைவி வள்ளி (30). கார்த்திகேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கார்த்திகேசனுக்கும், வள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததுள்ளது. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு வழக்கம்போல் கணவன், மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சுகன்யா மீது சூடான எண்ணையை எடுத்து வள்ளி ஊற்றி உள்ளார். இதில் படுகாயமடைந்த சுகன்யாவை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகா நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், சுகன்யா மீது எண்ணெயை ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக, வள்ளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி தலைமையில் போலீசார், வள்ளியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க, அழைத்துச் சென்றனர்.
Next Story