தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் பொதுக்குழு கூட்டம் -
Ariyalur King 24x7 |10 Jan 2025 12:27 PM GMT
சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் ஜன.10- தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. செயல் அறிக்கையை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தாக்கல் செய்தார். கூட்டத்தில் மாநில பிரதிநிதி சுந்தர்ராஜன் மற்றும் மாநில பிரதிநிதி துரை, மாநில மகளிர் அணி அமைப்பாளர் கௌசல்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் 5% சதவீதம் உள் இட ஒதுக்கீடு கேட்டும், சட்டநாதன் குழு பரிந்துரை அமல்படுத்த கேட்டும், திருக்கோவில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களையும் இசைகலைஞர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும், முடியெடுப்பவர்களுக்கே முடி சொந்தம் என்ற நிலையை உருவாக்க வேண்டும், நலவாரியத்தில் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும், நல வாரியத்தின் உதவித்தொகை மற்றும் ஓய்வூதியத் தொகையை உயர்த்தி தர வேண்டியும், வாழ்வாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி தர அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் ஜனவரி 24ஆம் தேதி கடையடைப்பும் அன்றே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட கோரிக்கையிணை சட்டமன்ற கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் மருத்துவ சமூகத்திற்கு 5% உள் இட ஒதுக்கீடு, சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி நிறைவேற்றிட வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.முடிவில் கிளை செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.
Next Story