ஆம்பூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நாம்தமிழர் கட்சியினர்..
Tirupathur King 24x7 |10 Jan 2025 12:29 PM GMT
ஆம்பூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நாம்தமிழர் கட்சியினர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நாம்தமிழர் கட்சியினர்.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு, பாலாற்றில் தோல்கழிவுகள், மருத்துவக்கழிவுகள் ஆகியவை கலப்பதால், புற்றுநோய் ஏற்படுவதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பன்னீர் செல்வம் நகர், பிலால் நகர், கே.எம்.நகர், ஆகிய பல்வேறு பகுதிகளில், தனி சுடுகாடு கேட்டு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காத ஆம்பூர் வட்டாச்சியர், ஆம்பூர் நிர்வாகத்தை கண்டித்தும், நாம்தமிழர் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்..
Next Story