செவித்திறன் குறைபாடு உடைய மாணவன், காக்ளியர் மெஷின் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |10 Jan 2025 12:38 PM GMT
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செவித்திறன் குறைபாடு உடைய நான்காம் வகுப்பு மாணவன் எஸ்.மிதுன் வர்ஷன் அவர்களுக்கு ரூ.2,57,250/- மதிப்பில் காக்லியர் மெஷின் (cochlear implant hearing aid) நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடு உடைய நான்காம் வகுப்பு மாணவன் எஸ்.மிதுன் வர்ஷன் அவர்களுக்கு ரூ.2,57,250/- மதிப்பில் காக்லியர் மெஷின் (cochlear implant hearing aid) வழங்கினார். மேலும், மாணவனுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறவேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று தமிழ்நாடு அரசால் துவக்கப்பட்டது. 11.01.2012 முதல் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து 23.09.2018 அன்று முதல் செயல்படுத்தப்படுகின்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானியக் கோரிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் அதிக சிகிச்சை முறைகளுடன், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய திட்ட பயனாளிகள் அதிகபட்சம் ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூபாய் 5 இலட்சம் வரையில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஏழை எளிய மக்கள் கூடுதல் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாயிலிருந்து 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இத்திட்டத்தின் மூலம் 11 தொடர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள் மற்றும் 8 உயர் சிறப்பு சிகிச்சை முறைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட 714 மருத்துவமனைகள் மற்றும் 886 தனியார் மருத்துவமனைகள், அரசு என மொத்தம் 1,600 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயன்பெறலாம். அத்துடன் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் தற்போது செயல்படுத்தப்படும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் செவித்திறன் குறைபாடு உடைய நான்காம் வகுப்பு மாணவன் எஸ்.மிதுன் வர்ஷன் அவர்களுக்கு ரூ.2,57,250 மதிப்புள்ள காக்லியர் மெஷின் வழங்கினார். அவரது தாயார் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது, என் மகன் பெயர் மிதுன் வர்ஷன் சின்ன முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறான். என் மகனுக்கு செவித்திறன் குறைபாடு காரணமாக பேச்சு மற்றும் கேட்கும் திறன் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. என் மகனுக்கு 2 இலட்சம் ரூபாய் மதிப்பில் கருவி வாங்கும் அளவிற்கு எங்களது வசதி இல்லை. மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அம்மா என் மகனுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்புள்ள காக்லியர் மெஷின் (cochlear implant hearing aid) முதலமைச்சர் அவர்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இன்றைய தினம் வழங்கி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்தவர்கள் மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் பொருத்திய பிறகு என் மகனுக்கு பேச்சு பயிற்சி வழங்கி பேச வாய்ப்புள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை போன்ற ஏழை, எளிய மக்களின் துயரை போக்கிடும் வகையில் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். என் மகனுக்கு காக்லியர் மெஷின் பொருத்திய மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினருக்கும், மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அம்மா அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் மாணவனுக்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் .ப.மகேஸ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story