தொழிலாளியை கொலை முயற்சி;  ரவுடி மீது வழக்கு

தொழிலாளியை கொலை முயற்சி;  ரவுடி மீது வழக்கு
குமரி
கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (54). கூலி தொழிலாளி. இவர் நேற்று நாகர்கோவில் பெருவிளை சிவன் கோவில் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோவின்ஸ் என்பவர் வேலுவை வழிமறித்தார்.        பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் அவரை வெட்ட முயன்றார். வேலு விலகிக் கொள்ளவே அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார். இதை தொடர்ந்து கிறிஸ்டோ வின்ஸ் வேலுவிற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுவிட்டார்.        இது குறித்து வேலு ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கிறிஸ்டோ வின்ஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கிறிஸ்டோ வின்ஸ் மீது ஏற்கனவே ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story