உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் கல்வி அலுவலர் பங்கேற்பு

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் கல்வி அலுவலர் பங்கேற்பு
உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் கல்வி அலுவலர் பங்கேற்றார்.
அரியலூர், ஜன.11- உடையார்பாளையம் அரசுமகளிர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள், பேரூராட்சி உறுப்பினர் கீதா கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தார். சிறப்புவிருந்தினராக அரியலூர் மாவட்டக்கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு வகுப்புகளை ஆய்வுசெய்தார், சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழர் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டும் மேலும் இந்தகல்வியண்டு சென்ற ஆண்டைப்போல இந்த ஆண்டும் அனைவரும்100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார், மின்சாரத்துறை ஆற்றல் மன்றம் சார்பாக நடைபெற்ற கட்டுரை, வினாடிவினா, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவிகளை வெகுவாகபாராட்டி வாழ்த்தினார். நிகழ்வில் ஆசிரியர்கள் செல்வராஜ், சாந்தி, மஞ்சுளா, வளர்மதி,பாவைசங்கர், காமராஜ், தமிழாசிரியர் இராமலிங்கம், சங்கீதா, அருட்செல்வி,இராஜசேகர், சத்யா,மாரியம்மன், லூர்துமேரி, உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா மற்றும் ஓவியர் காளமேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழரசி நன்றி கூறினார்.
Next Story