ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு "கோவிந்தா கோவிந்தா" கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
Rasipuram King 24x7 |10 Jan 2025 12:42 PM GMT
ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு "கோவிந்தா கோவிந்தா" கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் பக்தர்களுக்கு 34-ம் ஆண்டாக ஜன கல்யாண் சங்கம் சார்பாக 50,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் கோயிலின் 5.மணியளவில் பரமபதவாசல் திறப்பு விழாவானது நடைப்பெற்றது. சொர்க்கவாசல் வழியாக சேஷ வாகனத்தில் முத்தங்கி கவச அலங்காரத்தில் எழுந்தருளிய உற்ச்சவர் பொன் வரதராஜ பெருமாளை பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" கோஷத்துடன் பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர். திரளான பக்தர்கள் வருசையில் நின்று உற்ச்சவரை தரிசனம் செய்து பரமபதவாசல் வழியாக வந்து உற்ச்சவர் பெருமாளை வழிப்பட்டனர். இதனை தொடர்ந்து ராசிபுரம் ஸ்ரீதேவி , பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் தம்பதி சமேத பொன்வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், அதிகாலை 5.மணி அளவில் சேஷ வாகனத்தில் முத்தங்கி கவச அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளினார். முன்னதாக பரமபதவாசலில் பெருமாளை கருடாழ்வார் எதிர் கொண்டழைத்தார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி உற்சவர் உலா நடைபெற்றது. மேலும் ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேரர் சுவாமிக்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு 34-ம் ஆண்டாக ஜன கல்யாண் சங்கம் சார்பாக 50,000 லட்டுகள் தயார் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் சந்தானம் , ராமானுஜம், ஸ்ரீதர் நரசிம்மன் ஆகியோர் ஸ்ரீதேவி,பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்தனர்.
Next Story