சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
Sankarankoil King 24x7 |10 Jan 2025 12:50 PM GMT
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி(39) இவர் கடந்த இரண்டு நாட்கள் முன்பு விவசாயத் தோட்டத்திற்கு சென்று வருகிறேன். என கூறிவிட்டு வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து இன்று காலையில் விவசாய கிணற்றில் பிணமாக கிடைப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்ற கிணற்றில் கிடந்த உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story