மணிமங்கலம் ஏரியில் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு
Kanchipuram King 24x7 |10 Jan 2025 1:37 PM GMT
மணிமங்கலம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஏரி படப்பையில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளுள் இந்த ஏரியும் ஒன்றாகும். மணிமங்கலம், கரசங்கால், படப்பை, சேத்துப்பட்டு ஆகிய ஊராட்சி எல்லையில் 2,079 ஏக்கரில் பரந்து விரிந்து அமைந்துள்ள மணிமங்கலம் ஏரி 18.60 அடி ஆழம் கொண்டது. இந்நிலையில், படப்பை- புஷ்பகிரி சாலையில் மதுபான பாட்டில்களை சுத்தம் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் பல வருடங்களாக மணிமங்கலம் ஏரியில் கலந்து வருகிறது. இதனால், ஏரி நீர் மாசடைகிறது. மணிமங்கலம் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
Next Story