போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்.
Madurai King 24x7 |10 Jan 2025 1:51 PM GMT
மதுரை மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் உலகனேரி பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (10.01.2025) உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 143 வது ANTI DRUG CLUB மன்றம் ஆரம்பிக்கப்பட்டு போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், போதைப் பொருள் புழக்கம் மற்றும் பழக்கம் பரவாமல் தடுக்க மாணவர்களால் காவல்துறைக்கு உதவ முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் முதல்வர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
Next Story