"போதையில்லா தமிழகம் " விழிப்புணர்வு பேரணி

மதுரையில்"போதையில்லா தமிழகம் " விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, வருவாய்த்துறை (கலால்),ரெட் கிராஸ் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து போதை பொருள்களுக்கு எதிராகவும், போதை பொருள்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் மற்றும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து “போதை இல்லா தமிழகம் விபத்து இல்லா‌ மதுரை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியை இன்று (ஜன.10) மதுரை காவல் துணை ஆணையர் (வடக்கு) திருமதி. அனிதா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தல்லாகுளம் தமிழன்னை சிலை அருகே நிறைவடைந்தது. இப்பேரணியில் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், வருவாய்த்துறை (கலால்) அதிகாரிகள்,ரெட் கிராஸ் ரெட் கிராஸ் மற்றும் தனியார் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
Next Story