ராமநாதபுரம் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது
Ramanathapuram King 24x7 |10 Jan 2025 2:01 PM GMT
கமுதி தேவர் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான மூன்று நாள் இலவச பயிற்சி பட்டறை (ஸ்போக்கன் இங்கிலீஷ்) தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் முதல்வர் கோ. தர்மர் தலைமையில், ராமநாதபுரம் ரோட்டரி கிளப் தலைவர் ரா.அன்னப்பூரணதேவி முன்னிலையில் மாணவர்களுக்கான ஆங்கில வழி பேச்சுக் கலைக்கான இலவச மூன்று நாள் பயிற்சி பட்டறை தொடங்கியது. இந்த பயிற்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. முன்னதாக கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் ஜெயகாளை வரவேற்றார். கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் ஆங்கில மொழி குறித்த அச்சத்தை போக்கவும், மேல்படிப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசவும் ராமநாதபுரம் ரோட்டரி கிளப், விருதுநகர் ரோட்டரி கிளப், கமுதி தேவர் கல்லூரி இணைந்து இலவச பயிற்சி பட்டறையை நடத்துவதாகவும், இதற்காக திருச்சி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆங்கிலத்துறையில் புலமை பெற்ற பயிற்றுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ராமநாதபுரம் ரோட்டரி கிளப் தலைவர் அன்னப்பூரணாதேவி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம் மக்கள் தொடர்பு துறை அலுவலக உதவி இயக்குனர் தங்கவேலு கலந்துகொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். இதில் விருதுநகர் ரோட்டரி கிளப் திட்ட தலைவர் சியாம்ராஜ், ராமநாதபுரம் சுகம் மருத்துவமனை மருத்துவர் காளிமுத்து, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் ரோட்டரி கிளப் செயலாளர் வினோஜ்கண்ணன் நன்றி தெரிவித்தார்.
Next Story