அரியலூரில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Ariyalur King 24x7 |10 Jan 2025 3:12 PM GMT
அரியலூரில் காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அரியலூர், ஜன.10- தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு அரியலூரில் காவல் துறை சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரியலூர் தற்காலிகப் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக்சிவாச், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பேரணியில் இரு சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட காவல் துறையினர், தலைக்கவசம் உயிர்கவசம், தலைகவசம் அணிவீர் உயிரிழப்பை தவிர்ப்பீர், நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது கண்டிப்பாக சீட் பெல் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியாறு முக்கிய வீதிகளின் வழியே சென்று காமராஜர் ஒற்றுமைத் திடலில் முடித்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், போக்குவரத்துக் காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவ மற்றும் வாகன ஓட்டுநர் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக அனைவரும் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
Next Story