பொங்கல் பரிசுத் தொகுப்பு புகார்கள் இருப்பின் தொடர்பு எண்கள்
Sivagangai King 24x7 |11 Jan 2025 12:43 AM GMT
சிவகங்கை மாவட்டம், சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 – ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளின் மூலமாக தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4,16,597 (30.11.2024 நிலவரப்படி) அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 1,067 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் என ஆக மொத்தம் 4,17,664 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில், பொங்கல் பரிசு தொகுப்பானது நியாய விலைக்கடையில் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல்ரேகை சரிபார்ப்பு முறையில் வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட விவரமும் குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பினை குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். விரல்ரேகை சரிவர தெளிவாக பதிய இயலாத அட்டைதாரர்களுக்கு மட்டுமே, அவரே நேரில் வருவதை உறுதி செய்து பதிவேட்டில் கையொப்பம் பெற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். எக்காரணத்தைக் கொண்டும், தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாகவோ, இதர நபர்கள் வாயிலாகவோ பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் பயன்பெறலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின், மாவட்ட கட்டுப்பாட்டுறை அறையினை 1077 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1967 மற்றும் 18004255901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story