மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தேதி மாற்றம்
Sivagangai King 24x7 |11 Jan 2025 1:23 AM GMT
சிவகங்கை மாவட்டம், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், மாவட்ட அளவில் நடைபெற இருந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நிர்வாக காரணங்களினால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
சிவகங்கை மாவட்டம், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், மாவட்ட அளவில் 21.01.2025 மற்றும் 22.01.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நிர்வாக காரணங்களினால் வருகின்ற 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில் மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பெற்று வருகின்றன. அவ்வகையில், 2024-2025ஆம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்ட அளவில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு வருகின்ற 21.01.2025 (செவ்வாய்க்கிழமை) அன்றும், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கான கவிதை/கட்டுரை/பேச்சுப் போட்டிகள் வருகின்ற 22.01.2025 (புதன்கிழமை) அன்றும் நடைபெறவிருந்த கவிதை/கட்டுரை/பேச்சுப் போட்டிகள் நிர்வாக காரணங்களினால், 11,12-ம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு வருகின்ற 23.01.2025 (வியாழக்கிழமை) அன்றும், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கான கவிதை/கட்டுரை/பேச்சுப் போட்டிகள் வருகின்ற 24.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் சிவகங்கை, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.10,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ. 5,000/-மும் வழங்கப்பெற உள்ளன. பள்ளி மாணாக்கர்களுக்கான போட்டிகளில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும், தனியார்) 11 அல்லது 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள் மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஒரு மாணாக்கர் வீதம் 3 போட்டிகளுக்கும் 3 மாணாக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், போட்டியாளர்கள் போட்டி நடைபெறும் நாளன்று காலை 9.30 மணிக்குள் வருகை தர வேண்டும். அதுமட்டுமன்றி, போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் நடத்தப்பெறும் நேரத்தில் தெரிவிக்கப்பெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதத்துடன் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்களின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலமாக வருகின்ற 20.01.2025 (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்குள், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு tamilvalarchithurai2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடல் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story