சாலையில் தீப்பற்றி எரிந்த கார் குன்றத்துார் அருகே பரபரப்பு
Kanchipuram King 24x7 |11 Jan 2025 1:33 AM GMT
குன்றத்தூர் அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்துார் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ்குமார், 37. இவர், மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை, வழக்கம்போல் வீட்டில் இருந்து, 'ஸ்கோடா' காரில் பணிக்கு புறப்பட்டார். வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே உள்ள திருமுடிவாக்கம் பகுதியை கடந்த போது, காரின் முன்புறத்தில் திடீரென புகை வந்தது. இதனால், காரை சாலையோரம் நிறுத்தி, கீழே இறங்கிய போது மளமளவென தீ பரவியது. இதுகுறித்து, உமேஷ்குமார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள், கார் முழுதும்எரிந்து நாசமானது. இதுகுறித்து, குன்றத்துார் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Next Story