அரசு பள்ளியில் யாவரும் கேளிர் விளையாட்டுப் போட்டிகள்

அரசு பள்ளியில் யாவரும் கேளிர் விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு யாவரும் கேளிர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில் யாவரும் கேளிர் ஹவுஸ்சிஸ்டம் அனைத்து அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை அருகே குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தண்ணீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. இப்போட்டியை குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
Next Story