தனியார் கல்லூரியில் ஆட்சியர் தலைமையில் சமத்துவ பொங்கல்

தருமபுரி பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆட்சியர் சாந்தி தலைமையில் சமத்துவ பொங்கல்
தருமபுரி குண்டல்பட்டி அருகே செயல்பட்டு வரும் பச்சமுத்து கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு மகளிர் திட்டத்தின் மூலம் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சியை நேற்று மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்து. கல்லூரியில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் மாணவிகளிடம் கலந்து கொண்டு பொங்கல் வைத்தார். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தும் வகையில் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாள் என ஆண்டுதோறும் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அதனைதொடர்ந்து தனியார் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாஸ்கர் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆட்டம், பாட்டம், தனித்திறமை, கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது..
Next Story