சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் -பாட்டு பாடி அசத்திய மாவட்ட வருவாய் அதிகாரி !
Coimbatore King 24x7 |11 Jan 2025 1:58 AM GMT
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கோவை அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் தோரணங்கள் காட்டப்பட்டு, வண்ண கோலமிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த அடுப்பில், பெண் அலுவலர்கள் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடினர். விழாவில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். பொங்கல் விழாவையொட்டி கயிறு இழுக்கும் போட்டி, உறியடித்தல் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா அங்கு கூடியிருந்த அதிகாரிகளுடன் திரைப்பட பாடல் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அனைவருக்குமான தேனீர் மற்றும் உணவு ஏற்பாடுகளுடன், அதிகாரிகளின் குடும்பத்தினரோடு பொங்கல் விழா களைகட்டி உள்ளது.
Next Story