அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து துறை மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் சுற்றுப்புற பகுதியிலிருந்து மட்டுமின்றி, அண்டைய மாவட்டங்ளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் விழாவையொட்டி நேற்று தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 22 துறைளின் சார்பில் 22 இடங்களில் மாணவ, மாணவிகள் தனித்தனியாக பொங்கல் விழாவை கொண்டாடினர். ஒவ்வொரு துறையினரும், தாங்கள் வைத்த பொங்கலை பிற துறை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர். மாணவர் கள் வேஷ்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். விழாவில் அந்தந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவை கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். வண்ணமயமான மாணவ மாணவி கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Next Story