பெரம்பலூர் மாவட்ட எச்ஐவி கூட்டமைப்பின் சார்பில் நலத்திட்ட உதவி
Perambalur King 24x7 |11 Jan 2025 2:31 AM GMT
புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 60 நபர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எச்ஐவி கூட்டமைப்பின் சார்பில் புத்தாடைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள், மதிய உணவு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட எச்ஐவி கூட்டமைப்பின் சார்பில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 60 நபர்களுக்கு புத்தாடை மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைககள் வழங்கப்பட்டது. புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 60 நபர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எச்ஐவி கூட்டமைப்பின் சார்பில் புத்தாடைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகள், மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இணை இயக்குனர் மருத்துவ பணிகள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் டாக்டர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. பரம்பலூர் எச்ஐவி கூட்டமைப்பின் மாட்ட தலைவர் ஸ்ரீநாதன் வரவேற்புரை ஆற்றினார். பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் கலா, கண் மருத்துவர் டாக்டர் ராஜேஸ்வரி,ஏஆர் கூட்டு மருந்து சிகிச்சை மைய ஆற்றுப்படுத்துனர் தாமஸ் விக்டர், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர் பழனிவேல் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். ஆதரவு மற்றும் பராமரிப்பு மைய களப்பணியாளர் செல்வி இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தார். ஆதரவு மற்றும் பராமரிப்பு மையம் மற்றும் இளைப்பாறுதல் மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story