பாட்டி கொலை குற்றவாளியை கைது செய்யாததற்கு அதிருப்தி - வீடியோ பதிவிட்ட கடற்படை வீரர்
Sivagangai King 24x7 |11 Jan 2025 2:42 AM GMT
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பாட்டியை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யாததற்கு அதிருப்தி தெரிவத்து கடற்படை வீரர் வீடியோ பதிவிட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வெட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்புச்சாமி மனைவி ஒய்யம்மை(68). இவரின் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. கணவர் இறந்தநிலையில் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் சந்தைகளில் மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜன.8-ம் தேதி மாங்காய் வியாபாரம் செய்துவிட்டு. ஊருக்கு வந்தவரை சிலர் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், இதுவரை குற்றவாளியை கைது செய்யவில்லை. இதனால் அந்த மூதாட்டியின் பேரனும், கடற்படையில் பணிபுரிந்து வருபவருமான இளமாறன் ஓராண்டாகியும் குற்றவாளிகளை பிடிக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். மேலும் அதில் குற்றவாளியை பிடிக்க முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story