சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்

சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
சேலம் அருகே சின்னசீரகாபாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் (வயது 59). இவர் ஒரு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சைல்டு லைன் அமைப்பில் புகார் கொடுத்தனர். அவர்கள் விசாரணை நடத்தும்படி கல்வித்துறை அலுவலர்களிடம் தெரிவித்தனர். விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர், கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அலுவலர்கள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மீது சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது. மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story