உடுமலை ஆர் கே ஆர் ஞானோதயா பள்ளியில் பொங்கல் விழா உற்சாகம்

வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்பு
உடுமலை அடுத்த கொடிங்கியம் ஆர்.கே.ஆர் ஞானோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உடுமலை ஆர்.டி.ஓ என்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.உடுமலை ஆர்.கே. ஆர் நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.செயலர் ஆர்.கே. ஆர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். சூரியனுக்கும் ஏழு சப்தகன்னிகளுக்கும் படையலிட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் விளைச்சல் செழிக்கும் வகையில் வழிபாடு நடைபெற்றது. விழாவில் முக்கிய அம்சமாக திரைப்பட புகழ் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பொங்கல் விழாவை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களையும் கலந்து கொண்ட மாணவர்களையும் உடுமலை ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி,செயலர் ஆர். கே .ஆர்.கார்த்திக்குமார் மற்றும் பள்ளி முதல்வர் ஆனந்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story