குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்
Nagercoil King 24x7 |11 Jan 2025 5:53 AM GMT
குமரி
குமரி மாவட்டம் காப்புக்காடு அருகே விளாத்துறை ஆற்றில் இருந்து புதுக்கடை, இரணியல் நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடலோர கிராமங்கள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளை இணைக்கும் சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட இந்த குழாய்கள் அழுத்தம் தாங்காமல் அவ்வப்போது ஆங்காங்கே உடைந்து குடிநீர் வீணாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இரணியல் - தோட்டியோடு மாநில நெடுஞ்சாலை நுள்ளிவிளை புனித அந்தோணியார் ஆலயம் முன்பு பதிக்கப்பட்டு இருந்த குடிநீர் குழாய் திடீரென உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாக சாலையில் பாய்ந்து ஓடும் தண்ணீரால் வாகனகள், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த குடிநீர் குழாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story