போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
Chengalpattu King 24x7 |11 Jan 2025 5:56 AM GMT
போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் இரு மார்க்கத்திலும் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் எலப்பாக்கம், திம்மாபுரம் பகுதியிலிருந்து, சென்னை மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் புறவழிச்சாலை பகுதியில் வணிக வளாகங்கள் மற்றும் தனியார் வங்கிகள், மளிகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உள்ளன இவற்றில், இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் வரும் தனியார் வங்கி வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால் அச்சிறுபாக்கம், எலப்பாக்கம் பகுதியில் இருந்து வரும் அரசு பேருந்து மற்றும் புறவழி சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story