நாகர்கோவிலில் அரசின் புகைப்படக் கண்காட்சி
Nagercoil King 24x7 |11 Jan 2025 6:03 AM GMT
குமரி
குமரி மாவட்டம், நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், சாலை, பேருந்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டு திட்டங்கள், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது ஆகியவை குறித்தும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கியது, உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு பயன் பெற்றார்கள்.
Next Story