விளையாட்டுத் துறையில் ஏராளமான வாய்ப்புகள்: கிரிக்கெட் வீரா் நடராஜன்
Tiruchirappalli King 24x7 |11 Jan 2025 6:09 AM GMT
தமிழகத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்கள் அனைவருமே சிஎஸ்கே அணியில் இடம்பிடிக்க வேண்டும்
விளையாட்டுத் துறையில் இளைஞா்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் வீரா் நடராஜன் தெரிவித்தாா். திருச்சியில் தனியாா் நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. முன்பிருந்ததைவிட இளைஞா்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இளைஞா்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே தோ்ந்தெடுத்த துறையில் முன்னேற முடியும். தமிழகத்தைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்கள் அனைவருமே சிஎஸ்கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என விரும்புவா். அந்த வகையில் நானும் சிஎஸ்கே அணியில் விளையாட விரும்புகிறேன். அதற்கு கடினமாக உழைக்க வேண்டும். இரண்டு டெஸ்ட் தொடா்களில் தோல்வியடைந்ததை வைத்து, இந்திய அணியை குறைத்து கூற முடியாது. நிகழாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். டிஎன்பிஎல் போன்ற போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடா்ந்து நடத்தி, பல இளைஞா்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டு வரவேண்டும். இத்தகைய வாய்ப்புகளை தமிழக இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
Next Story