சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு

சுயேச்சை வேட்பாளரால் பரபரப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் போட்டியிட கையில் சாவு சட்டி, மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் பாலை ரோட்டில் கொட்டியதால் பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் ஆளாக இன்று தேர்தல் மன்னன் பத்ம ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து கோவை மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவர் கையில் சாவு சட்டி, சாவு மணியுடன் வந்தார். அவரை 100 மீட்டர் தொலைவு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி வேட்பு மனு தாக்கல் செய்ய சாவு சட்டியுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினர். இதனை அடுத்து அவர் சாவு சட்டி, சாவு மணியை கழட்டி அருகே இருந்தவரிடம் கொடுத்து விட்டு தான் கொண்டு வந்த பாக்கெட் பாலை ரோட்டில் கொட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்து நூறு முகமது கூறும் போது,மக்கள் ஜனநாயக அடிப்படையில் ஓட்டு போட வேண்டும். காசு வாங்கி ஓட்டு போடும் நிலை மாற வேண்டும். தேர்தல் என்றாலே 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் ஆனால் . மக்கள் 60 சதவீதம் தான் ஓட்டு போடுகிறார்கள். அதுவும் காசு கொடுத்தால்தான் ஓட்டு போட நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விடுமுறைக்காக ஓட்டு போடாமல் ஊருக்கு செல்கிறார்கள். அவர்கள் ஓட்டு போட்டு தான் ஊருக்கு செல்ல வேண்டும். எனவே பொதுமக்கள் இனியும் காசு வாங்கி ஓட்டு போடக்கூடாது. ஜனநாயகத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்போது 46 - வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யவந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Next Story