தென்காசி நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது
Sankarankoil King 24x7 |11 Jan 2025 6:19 AM GMT
நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி நகர அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலா் சுடலை தலைமை வகித்தாா். மாவட்ட இலக்கிய அணி செயலா் நெல்லை முகிலன், நகர அவைத்தலைவா் முத்துக்குமாரசுவாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு தென்காசி பகுதியில் உள்ள பூத்துகளுக்கான கமிட்டி நிா்வாகிகள் சோ்ப்பதை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் வெள்ளபாண்டி, சாமி ஆசாரி, பாலமுருகன், காதா், பட்டுப்பூச்சி, பீா் முகம்மது, நகர நிா்வாகிகள் முத்துக்குமாரசாமி, கருப்பசாமிராஜா, சுப்பிரமணியன், மீனவரணி செண்பகம், வாா்டு செயலா்கள் ராமசாமி யாதவ், சுடலைமணி, செல்வராஜ், ஒய். ஜி. மாரியப்பன், திருமலைசாமி உள்ளிட்ட யாரால மாணவர் கலந்து கொண்டனர்.
Next Story